தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சொக்கத்தங்கம் தேவா; வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

சொக்கத்தங்கம் தேவா; வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

சொக்கத்தங்கம் தேவா; வீடியோ வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

2


ADDED : அக் 17, 2026 03:46 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : அக் 17, 2026 03:46 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2.45 நிமிடங்கள் கொண்ட வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பதாவது;

என் அருமை நண்பர், இசையமைப்பாளர் தேவா திடீர் மறைவு ரொம்ப அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவர் எனக்கு அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என 3 படங்களை பண்ணினார். மூன்றும் மிகப்பெரிய சக்சஸ்.

அதற்கு அப்புறம் படையப்பா எடுக்கும் போது என் நண்பர்கள் எல்லாம் ஏஆர் ரஹ்மான் போடவேண்டும் என்று சொல்லும் போது நான் அரைமனதுடன் தேவாவிடம் போய் படையப்பா படத்துக்கு ஏஆர் ரஹ்மான் மியூசிக் என்று சொன்னபோது அவர் எழுந்து நின்று என் கையை பிடித்து, தாராளமாக பண்ணுங்கள் என்றார்.

இல்லை, நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ள கூடாது என்றேன். அதெல்லாம் இல்லை, இப்பத்தான் புது பையன் வந்திருக்கிறார், சந்தோஷமாக பண்ணுங்கள், உங்களிடம் 3 படங்கள் பண்ணியதே பெரும் பாக்கியம் என்றார்.

இப்படி ஒரு கள்ளம் கபடம் இல்லாத அருமையான சொக்கத்தங்கம் தேவா. வாழ்க்கையில் ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டவர். அண்ணன் தம்பிகள் 5 பேர். இவர்தான் மூத்தவர். தெருத்தெருவாக கச்சேரி பண்ணி கல்யாணத்தில் கச்சேரி வாசிச்சு, தம்பிகள் குடும்பத்தை காப்பாத்தினார்.

திரையுலகில் பெரிய இசையமைப்பாளரான போதும் கூட அவர் தனது தம்பிகளை விட்டுக் கொடுக்கவில்லை. கூடவே வைத்துக் கொண்டு இருந்தார். அருமையான குடும்பஸ்தர், நல்ல மனிதர்.

இளையராஜா கொடிக்கட்டி பறந்த காலத்தில், தனக்கென்று தனி பாணியை உருவாக்கி மிக பெரிய வெற்றியை அடைந்தார். இரண்டரை ஆண்டுகள் முன்பாக என்னிடம் வந்து, எல்லாரும் இசை நிகழ்ச்சி செய்கின்றனர், நானும் பண்ணுகிறேன் என்றார்.

நீங்கள்தான் தொடக்கி வைக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். நான் சந்தோஷமாக சென்று அதில் கலந்துகிட்டேன். அதன் பின்னர் வெளிநாடுகளில் கச்சேரிகளுக்கு சென்று வந்தார். ஒருமுறை சுற்றுப்பயணம் முடித்துவிட்டு 3 மாதங்கள் முன்பு என்னை வந்து பார்க்கிறார்.

ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, இளைய தலைமுறையினர் என்னை வரவேற்கிறார்கள் என்று கூறினார். இந்த சந்தோஷத்திலே நான் இன்னும் 10, 15 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு போய்விடுகிறேன் என்று என்னிடம் சொன்னார். ஆண்டவன்.. நீ ரொம்ப நல்லவன்பா, சந்தோஷமாக என்கூடவே வந்துவிடு என்று கூப்பிட்டுச் சென்றுவிட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு தனது வீடியோவில் ரஜினிகாந்த் உருக்கமுடன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us