தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஆக.,12ம் தேதி சூரிய கிரகணம்; நேரலை செய்வதாக நாசா அறிவிப்பு

ஆக.,12ம் தேதி சூரிய கிரகணம்; நேரலை செய்வதாக நாசா அறிவிப்பு

ஆக.,12ம் தேதி சூரிய கிரகணம்; நேரலை செய்வதாக நாசா அறிவிப்பு

2


UPDATED : ஜூலை 30, 2026 12:34 PM

ADDED : ஜூலை 30, 2026 12:17 PM

Follow on GoogleFavourite on Google

2

UPDATED : ஜூலை 30, 2026 12:34 PM ADDED : ஜூலை 30, 2026 12:17 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: வரும் ஆகஸ்ட் 12ம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணத்தை நேரலை செய்வதாக நாசா அறிவித்துள்ளது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவை நிலவு கடந்து செல்லும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வே, முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி இந்த அரிதான முழு சூரிய கிரகணம் நிகழுகிறது.

இந்த நிகழ்வை பொதுமக்களும் கண்டு ரசிக்க, முழு சூரிய கிரகணத்தை, தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப்பக்கங்களில் நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல், போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவின் வடபகுதி மக்கள், சூரியன் முழுமையான நிலவால் மறைக்கப்படும் நிகழ்வை காண முடியும். அதேபோல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.

இந்த முழு நிகழ்வும் சுமார் 4 மணிநேரம் 23 நிமிடங்கள் நீடிக்கும். இந்திய நேரப்படி ஆகஸ்ட் 12ம் தேதி இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது. இருப்பினும், நாசாவின் சமூகவலைதள நேரலை மூலம் காண முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us