UPDATED : செப் 12, 2026 01:09 PM
ADDED : செப் 12, 2026 09:56 AM

மதுரை: மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல், அரசு மரியாதையுடன் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
'பட்டிமன்ற பிதாமகன்' என போற்றப்படும் சாலமன் பாப்பையா, நகைச்சுவை பேச்சாலும், இலக்கிய கருத்துக்களாலும் தற்போதைய தலைமுறைகளையும் ஈர்த்தவர். செப்., 5ல் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்தது தான், இவரது கடைசி பட்டிமன்ற நிகழ்ச்சி. அதன் பின், உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்தார்.
நேற்று தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், மதியம் காலமானார். இவருக்கு மகன், மகள் உள்ளனர். இவரது மனைவி ஓரிரு ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். சாலமன் பாப்பையா உடல், மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று (செப் 12) காலை, 10:00 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கியது. சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையாக கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.இறுதியில் சாலமன் பாப்பையா உடல், அரசு மரியாதையுடன் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தினமலர் நேரலை!
அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
