தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஸ்மிட் மச்சாரை சோனியா ஏன் பாராட்டவில்லை

ஸ்மிட் மச்சாரை சோனியா ஏன் பாராட்டவில்லை

ஸ்மிட் மச்சாரை சோனியா ஏன் பாராட்டவில்லை

62


ADDED : அக் 04, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

62

ADDED : அக் 04, 2026 01:13 AM


62
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: உலகம் முழுதும் தற்போது, நம் நாட்டைச் சேர்ந்த விமானி ஸ்மிட் மச்சார் குறித்து தான் பேசப்படுகிறது. சக பைலட் இவரை கத்தியால் குத்திய போது, நிலை குலைந்து உயிருக்கு போராடிய போதும், விமானத்தில் பயணித்த, 174 பேரின் உயிரை காப்பாற்ற, 'காக்பிட்' எனப்படும், விமானிகள் அறையின் கதவை திறந்து விட்டார்.

அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இவருடன், பிரதமர் மோடி பேசிய வீடியோ லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. ஸ்மிட்டை பாராட்டி, 'இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியவர்' என, பேசியுள்ளார் மோடி. ஸ்மிட் ஒரு குஜராத்தி. இவரது பெற்றோர் மும்பையில் வசிக்கின்றனர். இவர்களுடனும் மோடி பேசியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரிந்த உடனேயே, ஸ்மிட் உடன் பேச முடிவெடுத்து விட்டாராம் மோடி. இதற்காக, பிரதமர் அலுவலக அதிகாரிகள், அபுதாபி சென்றனராம். 'என்ன பேச வேண்டும்; விமானத்தில் என்ன நடந்தது' என்பதை, ஸ்மிட் வாயிலிருந்தே வெளிக்கொணர்ந்து விட்டார் பிரதமர். ஸ்மிட் உடல்நிலை ஓரளவு சீரானதும், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்து வரப்படலாம் என, சொல்லப்படுகிறது. 174 பேரின் உயிரை காப்பாற்றிய இவருக்கு, நாட்டின் உயரிய விருதும் வழங்கப்படலாம்.

பிரதமர் மோடியுடன் பேசிய ஸ்மிட், தாக்குதல் நடந்த போது, அனுமான் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததாக சொல்லியுள்ளார். வட மாநிலங்களில் அனுமான் மந்திரம் மிகவும் பிரபலம்; அனைவரது வீடுகளிலும் இது ஒலிக்கும்.

இந்த விவகாரம் குறித்து காங்., தலைவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் வாய் திறக்கவேயில்லை. கண்டதற்கெல்லாம் சமூக வலைதளத்தில் பதிவிடும் இவர்கள், ஸ்மிட் மச்சாரின் வீர தீர செயல் குறித்து எதுவுமே பதிவிடவில்லை. இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்ததும், உடனே காங்., தரப்பிலிருந்து ஸ்மிட்டை பாராட்டி அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டது.

'உ.பி., சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்கிறது. அப்போது இந்த விஷயத்தை, முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் பயன்படுத்திக் கொள்வார். காங்கிரசை கடுமையாக விமர்சிப்பார்' என, பா.ஜ.,வினர் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக எடுத்துச் செல்ல தயாராகி விட்டதாக சொல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us