தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - எப்18: அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்!

விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - எப்18: அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்!

விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - எப்18: அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்!

28


UPDATED : அக் 31, 2026 10:00 PM

ADDED : அக் 31, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

28

UPDATED : அக் 31, 2026 10:00 PM ADDED : அக் 31, 2026 12:13 AM


28
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03' செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட், இரவு 11.51 மணிக்கு, விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது. திட்டமிட்டபடி பயணித்த செயற்கைக்கோள், நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.

​ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் கம்பீரமாக விண்ணை நோக்கிப் பாய்ந்தது. 2,250 கிலோ எடையுள்ள என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ராக்கெட் சீறிப் பாய்ந்ததும், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

முக்கிய அம்சங்கள்:


ஆரம்பக் காலங்களில் பல்வேறு தொழில்நுட்ப சவால்களைச் சந்தித்த ஜி.எஸ்.எல்.வி., தொடர் வெற்றிகள் மூலம் தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ளது. சுமார் 50 மீட்டர் உயரமும், 420 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டின் 20வது வரலாற்றுப் பயணம் இதுவாகும்.

இந்தியாவுக்கு ஏற்கனவே 3 வழிகாட்டி செயற்கைக்கோள்கள் உள்ள நிலையில், 4வது செயற்கைக்கோளாக என்.வி.எஸ் - 03 ஏவப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள்.

அணுக்கடிகாரம்:


வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களின் துல்லியமான செயல்பாட்டிற்கு நேரம் மிக முக்கியமானது. முன்பு வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடிகாரங்களில், பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், இந்த செயற்கைக்கோளில் முற்றிலும் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உயர்தர 'ரூபிடியம் அணுக்கடிகாரம்' பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

​அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., அமைப்பைச் சார்ந்திருக்காமல், இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் கட்டமைப்பான நாவிக் அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி நமது எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1,500 கி.மீ., சுற்றளவு வரை துல்லியமான வழிகாட்டுதல் தகவல்களை வழங்குவதே இதன் இலக்கு.

​பொதுமக்கள், ராணுவ பயன்பாடு:


இந்த இரண்டாம் தலைமுறை என்.வி.எஸ்., வரிசை செயற்கைக்கோளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் 'எல்1' அலைவரிசை சிக்னல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் வாகன நேவிகேஷனில் 'நேவிக்' பயன்பாடு எளிதாகும். அதே சமயம் நாட்டின் பாதுகாப்புப் படையினரின் துல்லியமான கண்காணிப்புத் தேவைகளுக்கும் இது பெரும் பலமாக அமையும்.

Image 1638326


வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்:


'ஜி.எஸ்.எல்.வி - எப்18' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 'என்.வி.எஸ் - 03' செயற்கைக்கோள், திட்டமிட்டபடி நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திட்டம் வெற்றி பெற்றதாக, இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



இந்தியாவின் பொக்கிஷம் என்விஎஸ்-03


செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது: 56 நாட்களில் திட்டம் நிறைவேறியுள்ளது. வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நேவிக் செயற்கைக்கோள் இந்தியாவின் சொத்து. தேசத்தின் பொக்கிஷம். இவ்வாறு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us