ADDED : மே 22, 2026 05:05 AM

கோவை: சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக, 'லோகோ'வுடன், புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவுள்ள சிங்கப்பெண் சிறப்பு படை, அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமான வழிகாட்டுதல், துவக்கவிழா நிகழ்வுக்கு பின்னர் முழுமையாக களம் இறங்கவுள்ளனர்.
இச்சிறப்பு படையின் முக்கியத்துவம், தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில், பிரத்யேக லோகோ மற்றும் சீருடை தயாராகி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிங்கப்பெண் சிறப்பு படைக்கு கோவை மாநகரில் இரண்டு, ரூரல் பகுதியில் ஒன்று என மூன்று குழுக்கள் தயாராக உள்ளன.
சிறப்பு படை போலீசாருக்கான செயல்பாடுகள், பணி விபரங்கள், தனி ஸ்டேஷன் அமைக்கப்படுமா என்ற வழிகாட்டுதல்கள் வெளியான பின், முழுமையான தகவல்கள் அளிக்கப்படும். இதற்கான பிரத்யேக லோகோ, சீருடை அறி முகப்படுத்த ஆலோசிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
