தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழ் மொழி, கலாசாரத்தை பரப்புங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

தமிழ் மொழி, கலாசாரத்தை பரப்புங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

தமிழ் மொழி, கலாசாரத்தை பரப்புங்கள்: பிரதமர் மோடி அறிவுரை

7


UPDATED : அக் 11, 2026 06:01 PM

ADDED : அக் 11, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

7

UPDATED : அக் 11, 2026 06:01 PM ADDED : அக் 11, 2026 05:31 PM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் 50வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நவராத்திரி துவக்க விழாவில், சிவசக்தி ரூபமான தமிழகத்தின் மண்ணில் கால்பதித்து இருக்கிறேன்.

நாட்டின் எதிர்காலம்

உங்கள் அனைவரிடமும் இருக்கும் உற்சாகம், ஆர்வம் ஆகியவற்றை உணர்கிறேன். உங்களின் கண்களில் தெரியும் உற்சாகம், நாட்டின் எதிர்காலம் தெரிகிறது. சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், இங்கு வருவதற்கு தாதமாகிவிட்டது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

வளர்ச்சியடைந்த நாட்டிற்கு பலம் கூட்ட இளைஞர்கள் விரும்புகின்றனர். அதற்கு தேவையான புதிய கருத்துகள், தீர்வு ஆகியவற்றால் உலகின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படும். உலகம் தீர்வை தேடுகிறது. அந்த தீர்வை அளிக்கும் வல்லமை இளைஞர்களிடம் உள்ளது.



இன்று இந்தியாவிடம் எண்ணிலடங்கா வாய்ப்பு உள்ளன. இளைஞர்கள், தங்களின் எதிர்காலத்தை இதன் பின்னணியில் காண வேண்டும். இது இளைஞர்களுக்கான நேரம், சந்தர்ப்பம். நமது கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து இதனை சாதிப்போம்.

மாணவர்களுக்கு பாடம்


திருவள்ளுவரை நினைவு கூர்வது மிகவும் பொருத்தமானது. அவர் மாணவர்களுக்கு உகந்த கருத்துகள், அறிவுரைகளை கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு, திருக்குறளின் ரஷ்ய மொழியாக்கத்தை அளித்தேன். வாழ்க்கை முழுதும் புதிதாக கற்க விரும்புபவர்களுக்கு திருக்குறள் ஒரு வழிகாட்டி.

நாம் எப்படி சிறப்பான முறையில் கற்க வேண்டும் என திருவள்ளுவர் கற்பித்துள்ளார். கற்பித்தபடி நாம் வாழ வேண்டும் என்கிறார். இது மாணவர்களுக்கு, பாடம் கற்றல்.



உத்வேகம்


தமிழ் இலக்கியத்தின் மற்றொரு ஆளுமை என்றால், அது பாரதியார். அவரின் ஆளுமையில் காசிக்கு பங்களிப்பு உள்ளது. இளம் வயதில் காசியில் பாடம் படித்தார். அந்நகரின் ஆன்மிக மற்றும் தேசிய சூழல் அவரின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.இன்றும் வாரணாசி மக்கள் பாரதியாரை அன்போடும், பாசத்தோடும் நினைவுகூர்கின்றனர். அவரின்,'அச்சமில்லை, அச்சமில்லை,' பாடல் நமக்கு அச்சமில்லாமல் வாழ உத்வேகம் அளிக்கிறது.

உங்கள் எண்ணப்படி வாழ்ந்து பாருங்கள். பெரிதாக கனவுகாணுங்கள். வித்தியாசமாக சிந்தியுங்கள். அச்சமின்றி வாழுங்கள்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டேன். அந்த நினைவுகள் வருகின்றன. இந்த பயணம், நாட்டின் பன்முகத்தன்மையை அறிய முடிந்தது. தமிழ் மீது இருக்கும் அன்பு பெருகியது. இந்தியாவை அதிகமாக சுற்றி பாருங்கள். அதிக பயணம் மேற்கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரம், பாரம்பரியம், இலக்கியம், கவிதைகள், மரபுகள் ஆகியவற்றை பரப்புங்கள். அங்குள்ள உங்கள் நண்பர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.



நாட்டின் கல்வித்துறையில் ஒட்டுமொத்த அமைப்பும் மாறுகிறது.2014 ல் சுமார் 750 பல்கலை மட்டுமே இருந்தது. இன்று அதன் எண்ணிக்கை 1300ஐ தாண்டியது.கல்லூரிகளின் எண்ணிக்கையும் 38 ஆயிரத்தில் இருந்து 52 ஆயிரத்தை தாண்டியது. கடந்த ஆண்டுகளில் புதிய ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடிக்கள், எய்ம்ஸ்கள் வந்துள்ளன.

இந்திய கல்வி நிறுவனங்களின் உலகளாவிய அடையாளம் உயர்கிறது. 2015க்கான கியூஎக்ஸ் தரவரிசையில் 14 பல்கலை மட்டுமே 2014 ல் இருந்தது. 2027 தரவரிசையில் இந்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்தது.



இந்தியாவில் ஒலிம்பிக்

ஒவ்வொரு இளைஞரிடமும் ஏதோ ஒரு திறமை உள்ளது. அதனை வெளிக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். விளையாட்டு உலகம் வேகமாக மாறுகிறது. புதிய வசதிகள் உருவாகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவும் பயற்சியும் கிடைக்கிறது. சர்வதேச அளவில் இந்தியா வீரர்களின் திறமை அதிகரிக்கிறது.

2030 ல் காமனவெல்த் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 2036 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவுகளுடன் முன்னேறுகிறோம். வர உள்ள ஆண்டுகளில் உலகின் பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us