இலங்கை வளர்ச்சி பணி: ரூ.71,000 கோடி வழங்கியது இந்தியா
இலங்கை வளர்ச்சி பணி: ரூ.71,000 கோடி வழங்கியது இந்தியா
ADDED : ஆக 01, 2026 10:05 PM

கொழும்பு: இலங்கைக்கான இந்தியாவின் வளர்ச்சி நிதி, 71,250 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கையின் கீழ் இந்தியா நிதியுதவி அளிக்கிறது. இதன் மூலம் இரு தரப்பு உறவு மேம்பட்டுள்ளது.
கொழும்புவில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் இந்திய துாதர் சந்தோஷ் ஜா, இலங்கை தொழிலாளர் நல அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்ற நடந்தது.
இது குறித்து, சமூக வலைதளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவு:
இலங்கை முழுதும் அந்நாட்டு மக்களின் நலனை மையமாக வைத்து இந்தியா நிதியுதவி அளிக்கிறது. அந்த வகையில், இதுவரை வளர்ச்சி நிதியாக, 71,250 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 8,075 கோடி ரூபாய் நேரடி மானியங்களும் அடங்கும். வீட்டுவசதி, சுகாதாரம், கல்வி, ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
