தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?

 இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?

 இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?

40


ADDED : ஜூன் 26, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

40

ADDED : ஜூன் 26, 2026 05:42 AM


40
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்தார்.

இந்நிலையில், முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இது தவிர, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்ததால், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், சட்டசபைக்கு ஸ்டாலின் வர முடியாததை சுட்டிக்காட்டி விமர்சித்தார். இதனால், ஏற்கனவே ஸ்டாலின் தோல்வியால் அதிர்ச்சியில் உள்ள தி.மு.க.,வினர் கோபமடைந்துள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் தி.மு.க., நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு பேசுகையில், ''சட்டசபையில் முதல்வர் விஜய், 'அப்பாவை காணோம்' என்கிறார்; வருவார், எவ்வளவு விரைவாக வர வேண்டுமோ, அவ்வளவு விரைவாக மீண்டும் சட்டசபைக்கு வருவார்; இது உறுதி,'' என்றார்.

இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி என்பதையே, நேருவின் பேச்சு வெளிப்படுத்துவதாக தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us