sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலின், இபிஎஸ் வரவில்லை; நயினார் பங்கேற்பு

ஸ்டாலின், இபிஎஸ் வரவில்லை; நயினார் பங்கேற்பு

ஸ்டாலின், இபிஎஸ் வரவில்லை; நயினார் பங்கேற்பு

27


UPDATED : மே 10, 2026 02:17 PM

ADDED : மே 10, 2026 09:42 AM

Follow on GoogleFavourite on Google

27

UPDATED : மே 10, 2026 02:17 PM ADDED : மே 10, 2026 09:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

விஜய் பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் முதல்வர்கள் ஸ்டாலின், இபிஎஸ் ஆகியோர் வரவில்லை. விஜய் பதவியேற்பு விழாவில், திமுக மற்றும் அதிமுக சார்பில் நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரசாரத்தில் திமுக மீது விஜய் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அவற்றுக்கு திமுக தரப்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்றார் விஜய். ஆனால், டில்லிக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று ஸ்டாலின் கூறினார்.இப்படி இரு தரப்புக்கும் கசப்பை ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் நடந்த முடிந்தன. முடிவில் விஜய் வெற்றி பெற்று விட்டார். அவருக்கு நேரடியாக வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலின், பெயர் குறிப்பிடாமல் புதிய ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில் இன்று நடக்கும் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொள்ளவில்லை. அதேபோல, பெயர் குறிப்பிடாமல் புதிய ஆட்சி அமைக்கும் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்ம், இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. இன்னொரு முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ம், வரவில்லை. திமுக, அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட தலைவர்களும், பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன், தமிழிசையும் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us