sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு

/

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு

ஆயிரம் விளக்கில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு

22


UPDATED : பிப் 22, 2026 07:43 PM

ADDED : பிப் 21, 2026 07:04 AM

Google News

22

UPDATED : பிப் 22, 2026 07:43 PM ADDED : பிப் 21, 2026 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துாரில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி ஆகியோர் போட்டியிட, தி.மு.க.,வினர் விருப்ப மனு அளித்தனர்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறும் பணி, தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 1,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றனர். பொதுத் தொகுதிகளில் போட்டி யிட, விண்ணப்பக் கட்டணமாக 25,000 ரூபாய்; தனித் தொகுதிகளில் போட்டியிட 15,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விருப்ப மனுவில், கட்சியில் வகிக்கும் பொறுப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வேறு அமைப்புகளில் வகிக்கும் பதவி, கட்சி போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி, திருச்செந்துார் தொகுதியில் கனிமொழி ஆகியோர் போட்டியிட, கட்சியினர் விருப்ப மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us