தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி

மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி

மதுரையில் களமிறங்குகிறார் சுந்தர் சி!: அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டி


UPDATED : மார் 28, 2026 01:09 PM

ADDED : மார் 28, 2026 12:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2026 01:09 PM ADDED : மார் 28, 2026 12:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி போட்டியிடுகிறார் என புதிய நீதிக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் ஆகியவை பாஜ சார்பில் வரும் திங்கள் கிழமை அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியானதும் முறைப்படி வேட்பாளரை அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்வாறு ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.

சுந்தர். சியின் மனைவி குஷ்பு, பாஜவில் உள்ளார்.


மதுரை மத்திய தொகுதி தற்போது திமுகவின் வசமுள்ளது. கடந்த 2021 தேர்தலில் இங்குப் போட்டியிட்ட அமைச்சர் தியாகராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us