நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்: தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : அக் 07, 2025 07:47 PM

புதுடில்லி: நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி மேற்கொள்வது என்பது தேர்தல் கமிஷனின் தனியுரிமை எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட் அதில் தலையிட மறுத்துவிட்டது.
பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி குறித்த வழக்க உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது
விசாரணையின்போது நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி நடத்துவது என்பது தேர்தல் கமிஷனின் வரம்புக்குள் வருகிறது. மற்ற மாநிலங்களில் நடக்கும் போது அதில் நீதிமன்றம் தலையிடாது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தேர்தல் கமிஷனின் கடமை. அனைத்தையும் ஏன் நீதிமன்றம் கையில் எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். தேர்தல் கமிஷனுக்கு சொந்தமாக விதிமுறைகள் உள்ளன. அதன்படி செய்யட்டும்.
எங்கள் பெயர் நீக்கப்பட்டது குறித்து முறையீடு செய்ய விரும்புகிறோம். ஆனால் உத்தரவு கிடைக்கவில்லை எனக்கூறும் 100 பேரின் பட்டியலை மனுதாரர்கள் வழங்க முடியுமா? இதனை யாருக்காக செய்கிறோம். மக்கள் ஏன் முன்வரவில்லை என்பதே தற்போதைய கேள்வி எனக்கூறினார். மேலும் இந்த வழக்கை அக்.,09ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.