நிதாரி கொலையில் இருந்து விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி தற்கொலை
நிதாரி கொலையில் இருந்து விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி தற்கொலை
ADDED : செப் 18, 2026 02:50 PM

-நமது நிருபர்-
நொய்டாவில் 2006ம் ஆண்டு நடந்த கொடூரமான நித்தாரி தொடர் கொலைகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
50 வயதான சுரேந்திர கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் உள்ள சப்த சரோவர் சாலையில், தான் நடத்தி வந்த ஒரு சிறிய தேநீர்க் கடையில் இன்று (செப் 18) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நொய்டாவின் நிதாரி கிராமத்தில் 2006ல் வெளிச்சத்திற்கு வந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர் கொலை வழக்குகளில் இவர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டார். 19 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்த இவருக்குப் பல வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், முறையான தடயவியல் ஆதரவு இல்லாததாலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இவரை அனைத்து வழக்குகளிலிருந்தும் அடுத்தடுத்து விடுவித்தன. கடந்த நவம்பர் 2025ல் கடைசி வழக்கிலிருந்தும் உச்ச நீதிமன்றம் இவரை முற்றிலும் விடுவித்ததை அடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார்.
போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், முறையான தடயவியல் ஆதரவு இல்லாததாலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இவரை அனைத்து வழக்குகளிலிருந்தும் அடுத்தடுத்து விடுவித்தன.
கடந்த நவம்பர் 2025ல் கடைசி வழக்கிலிருந்தும் உச்ச நீதிமன்றம் இவரை முற்றிலும் விடுவித்ததை அடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார். தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்.
குடும்பப் பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
