sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது

/

3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது

3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது

3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது அறிவித்தது தமிழக அரசு: பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது

3


UPDATED : செப் 24, 2025 10:27 AM

ADDED : செப் 24, 2025 09:41 AM

Google News

3

UPDATED : செப் 24, 2025 10:27 AM ADDED : செப் 24, 2025 09:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன. தற்போது, 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள்

அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில், அடுத்த மாதம் நடக்க உள்ள விழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவிப்பார்.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும். நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் எஸ் ஜே சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்தது.

2021ம் ஆண்டு


2021ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்:

திரைப்படம்

எஸ்.ஜே.சூர்யா- திரைப்பட நடிகர்

சாய் பல்லவி- திரைப்பட நடிகை

லிங்குசாமி- திரைப்பட இயக்குநர்

ஜெயகுமார்- திரைப்பட அரங்க அமைப்பாளர்

சூப்பர் சுப்பராயன் - திரைப்பட சண்டை ப்பயிற்சியாளர்

சின்னத்திரை

கமலேஷ்- சின்னத்திரை நடிகர்

இயல்

திருநாவுக்கரசு- எழுத்தாளர்

நெல்லை ஜெயந்தா - இயற்றமிழ்க் கவிஞர்

சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர்- சமயச்சொற்பொழிவாளர்

இசை

அசோக் ரமணி - குரலிசை

சற்குருநாதன் ஓதுவார்- திருமுறை தேவார இசை

தக்கேசி- தமிழிசைப் பாடகர்

நரேந்திரன்- மிருகதங்கம்

நரசிம்மன்- கோட்டு வாத்தியம்

பில்லப்பன்- நாதசுர ஆசிரியர்

டி.ஜே.சுப்பிரமணியன்- நாதசுரம்

சீனிவாசன்- நாதசுரம்

சேகர்- தவில்

நாட்டியம்

பழனியப்பன்- பரதநாட்டிய ஆசிரியர்

பிரியா கார்த்திகேயன்- பரதநாட்டியம்

நாடகம்

முருகன்- நாடக நடிகர்

நாராயணன்- நாடக இயக்குநர்

அலெக்ஸ்- ஆர்மோனியம்

இசை நாடகம்

விசுவநாதன்- இசை நாடக நடிகர்

கிராமியக் கலைகள்


வீர சங்கர்-- கிராமியப் பாடகர்

காமாட்சி- பொய்க்கால் குதிரை ஆட்டம்

முனுசாமி- பெரிய மேளம்

மருங்கன்- நையாண்டி மேள நாதஸ்வரம்

கே.கே.சி.பாலு- வள்ளி ஒயில்கும்மி

இதர கலைப்பிரிவுகள்

ஜவானந்தம்- ஓவியர்

2022ம் ஆண்டு


2022ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்:

திரைப்படம்

விக்ரம் பிரபு- திரைப்பட நடிகர்

ஜெயா.வி.சி.குகநாதன்- திரைப்பட நடிகை

விவேகா- திரைப்பட பாடலாசிரியர்

டைமண்ட் பாபு- திரைப்பட செய்தித் தொடர்பாளர்

லட்சுமி காந்தன்- திரைப்பட புகைப்பட கலைஞர்

சின்னத்திரை

மெட்டி ஒலி காயத்ரி- சின்னத்திரை நடிகை

இயல்

சாந்தகுமாரி சிவகடாட்சம்- எழுத்தாளர்

அப்துல்காதர்- இலக்கிய பேச்சாளர்

முத்துகணேசன்- சமயச் சொற்பொழிவாளர்

இசை

ஜெயஸ்ரீ வைத்தியநாதன்- குரலிசை

சாரதா ராகவ்- குரலிசை

பகலா ராமதாஸ்- வயலின்

நாராயணன்- மிருகதங்கம்

எஸ்.ஜி.ஆர்.எஸ்.மோகன் தாஸ்- நாதசுரம்

முருகவேல் நாதசுரம்

பாபு- தவில்

சுசித்ரா பாலசுப்பிரமணியன்- கதா காலட்சேபம்

நாட்டியம்

அமுதா தண்டபாணி- பரதநாட்டிய ஆசிரியர்

சுப்பிரமணிய பாகவதர்- பாகவத மேளா

சுரேஷ்- பரத நாட்டிய குரலிசை

நாடகம்


பொன் சுந்தரேசன்- நாடக நடிகர்

நன்மாறன்- நாடக இயக்குநர்

சோலை ராஜேந்திரன்- நாடகத் தயாரிப்பாளர்

இசை நாடகம்

சத்தியராஜ்- இசை நாடக நடிகர்

கிராமியக் கலைகள்


ரஞ்சிதவேல் பொம்மு- தேவராட்டம்

கலைவாணன்- பொம்மலாட்டம்

எம்.எஸ்.சி.ராதாரவி- தப்பாட்டம்

கே.பாலு- நையாண்டி மேள நாதஸ்வரம்

இதர கலைப்பிரிவுகள்

சாமிநாதன்- பண்பாட்டுக் கலை பரப்புனர்

லோகநாதன்- ஓவியர்.

2023ம் ஆண்டு


2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்:

திரைப்படம்

மணிகண்டன்- திரைப்பட நடிகர்

ஜார்ஜ் மரியான்- திரைப்பட குணச்சித்திர நடிகர்

அனிருத்- திரைப்பட இசையமைப்பாளர்

ஸ்வேதா மோகன்- திரைப்பட பின்னணிப் பாடகி

சாண்டி (எ) சந்தோஷ்குமார்- திரைப்பட நடன இயக்குநர்

நிகில் முருகன்- திரைப்பட செய்தித் தொடர்பாளர்

சின்னத்திரை

உமா சங்கர் பாபு- சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

அழகன் தமிழ்மணி- சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

இயல்


ஜீவபாரதி- இயற்றமிழ்க் கவிஞர்

இசை


காசியப் மகேஷ்- குரலிசை

ஹேமலதாமணி- வீணை

வே.பிரபு- கிளாரினெட்

பி.பி.ரவிச்சந்திரன்- நாதசுரம்

ஞான நடராஜன்- நாதசுரம்

பரமேஸ்வரன்- நாதசுரம்

ராமஜெயம் பாரதி- தவில்

ராதாகிருஷ்ணன்- தவில்

நாட்டியம்

தனசுந்தரி- பரதநாட்டிய ஆசிரியர்

ஜெயப்பிரியா- குச்சுப்பிடி நாட்டியம்

ஹரி பிரசாத்- பரதநாட்டியக் குரலிசை

நாடகம்

ஜோதிகண்ணன்- பழம் பெரும் நாடக நடிகர்

வானதிகதிர் (எ) பெ.கதிர்வேல்- நாடக நடிகர்

தேவநாதன்- விழிப்புணர்வு நாடக நடிகர்

இசை நாடகம்

ஏ.ஆர்.ஏ.கண்ணன்- இசை நாடக நடிகர்

தமிழ்ச்செல்வி- இசை நாடக நடிகை

கிராமியக் கலைகள்

ராமநாதன்- தெருக்கூத்து

ஜெகநாதன்- வில்லுப்பாட்டு

மகாமணி- நையாண்டி மேள தவில்

சந்திரபுஷ்பம்- கிராமியப் பாடல் ஆய்வாளர்

இதர கலைப்பிரிவுகள்

தீனதயாளன்- சிற்பி

சிறப்பு விருதுகள்

பாரதியார் விருது (இயல்)- முருகேச பாண்டியன்

எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை)- கே.ஜே. யேசுதாஸ்

பாலசரசுவதி விருது (நாட்டியம்)- பதஸ்ரீ முத்துகண்ணம்மாள்






      Dinamalar
      Follow us