தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தமிழக அமைச்சர்கள் 'பயோ டேட்டா'!

தமிழக அமைச்சர்கள் 'பயோ டேட்டா'!

தமிழக அமைச்சர்கள் 'பயோ டேட்டா'!


ADDED : மே 11, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது சிறப்பு நிருபர்

தமிழக அமைச்சரவையில் விஜய் தவிர, அமைச்சர்கள் 9 பேரும் பதவியேற்றுள்ளனர். இவர்களது பயோ டேட்டா வருமாறு:

பெயர்: ஆனந்த்

வயது: 62

முகவரி: நான்காவது மாடி, பாகாயம் பிரகாதி பேஸ் 2, காரப்பாக்கம், சென்னை



தொழில்: சுயதொழில் மற்றும் வணிகம்



படிப்பு: 9ம் வகுப்பு



தொகுதி: தியாகராய நகர்



அரசியல் பின்னணி: புதுச்சேரியை சேர்ந்தவர். புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் சார்பில், புஸ்ஸி தொகுதியில், 2006ல் எம்.எல்.ஏ., ஆனார். பின், விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து, அதன் பொறுப்பாளர் ஆனார். தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலராக உள்ளார்.

பெயர்: ஆதவ் அர்ஜுனா

வயது: 43



முகவரி: கோபால கிருஷ்ணா கார்டன், மஹாராணி சின்னம்மா சாலை, வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை, சென்னை



தொழில்: வணிகம்



படிப்பு: பி.ஏ., அரசியல்

தொகுதி: வில்லிவாக்கம்



அரசியல் பின்னணி: தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் நெருங்கிய நண்பர். கடந்த 2016ல் அக்கட்சியில் இணைந்தார். 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., பின்னணியில் இருந்து தேர்தல் வியூக பணிகளில் ஈடுபட்டார். பின், 2024ம் ஆண்டு வி.சி.க.,வில் இணைந்து, துணை பொதுச் செயலர் ஆனார். அதே ஆண்டு இறுதியில் வி.சி.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்து, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலராக உள்ளார்.

பெயர்: கே.ஏ.செங்கோட்டையன்

வயது: 78

முகவரி: 73. மாரியம்மன் கோவில் வீதி, குள்ளம்பாளையம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம்

தொழில்: விவசாயம் மற்றும் பொது சேவை

படிப்பு: 10ம் வகுப்பு

தொகுதி: கோபிசெட்டிபாளையம்



அரசியல் பின்னணி: அ.தி.மு.க.,வில் ஒன்பது முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார். வனம், போக்குவரத்து, வேளாண்மை, பள்ளிக்கல்வி, தகவல் தொழில்நுட்பம், வருவாய்த் துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2025ம் ஆண்டு த.வெ.க.,வில் இணைந்தார். தற்போது அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

பெயர்: கே.ஜி.அருண்ராஜ்

வயது: 45



முகவரி: நாதகாடு, குமாரமங்கலம், திருச்செங்கோடு, நாமக்கல்



தொழில்: ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி

படிப்பு: எம்.பி.பி.எஸ்.,



தொகுதி: திருச்செங்கோடு



அரசியல் பின்னணி: ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான அருண்ராஜ், வருமான வரித்துறையில் பணியாற்றி வந்தார். கடந்த 2020ம் ஆண்டு விஜய் வீட்டில், இவர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அதன் பின், விஜயுடன் நெருக்கமாகி, 2025ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்தார். கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலராக உள்ளார்.

பெயர்: வெங்கடரமணன்



வயது: 48

முகவரி: டி.எஸ்.ஆர். ஆர்காட், ஏகாம்பரம் தெரு, பம்மல், சென்னை



தொழில்: வழக்கறிஞர்

படிப்பு: எம்.காம்., - எம்.பி.ஏ., - எம்.எல்.,

தொகுதி: மயிலாப்பூர்



அரசியல் பின்னணி: விஜயின் நீண்ட நாள் நண்பர். த.வெ.க.,வின் பொருளாளராக உள்ளார்.

பெயர்: ஆர்.நிர்மல்குமார்

வயது: 44



முகவரி: நிர்மல் அபார்ட்மென்ட்ஸ், இரண்டாவது தெரு, பர்சுவநாத் அவின்யூ, மாடம்பாக்கம், சென்னை



தொழில்: சுயதொழில்

படிப்பு: எம்.ஏ., குற்றவியல் மற்றும் போலீஸ் நிர்வாகம்



தொகுதி: திருப்பரங்குன்றம்



அரசியல் பின்னணி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் பொறுப்பில் இருந்தவர். பா.ஜ.,வில் நீண்ட நாட்களாக பயணித்தார். முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், அங்கிருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்து, அக்கட்சி தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலராக இருந்தார். த.வெ.க., துவங்கியதும், 2024ல் அங்கு ஐக்கியமாகி, இணை பொதுச் செயலராக உள்ளார்.



பெயர்: ராஜ்மோகன்

வயது: 39

முகவரி: ஐந்தாவது தளம், தாய்சா, மேற்கு நடேசன் நகர், விருகம்பாக்கம், சென்னை

தொழில்: சுயதொழில்

படிப்பு: பி.ஏ., இதழியல்



தொகுதி: எழும்பூர்

அரசியல் பின்னணி: பட்டிமன்ற பேச்சாளர். அரசியல் கட்சி தலைவர்களை அடுக்குமொழியால் பாராட்டி, புகழ் பெற்றவர். த.வெ.க.,வில் இணைந்து, அக்கட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கட்சியின் துணைப் பொதுச் செயலராக உள்ளார்.



பெயர்: டாக்டர் பிரபு

வயது: 41



முகவரி: 276, இருமதி கிராமம், திடக்கோட்டை அஞ்சல், தேவகோட்டை தாலுகா, சிவகங்கை மாவட்டம்

தொழில்: பல் மருத்துவர்



படிப்பு: பி.டி.எஸ்.,

தொகுதி: காரைக்குடி

அரசியல் பின்னணி: மருத்துவரான பிரபு, பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியின், ஐ.டி., அணி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். ரீல்ஸ் வழியே பிரபலமான பிரபு, த.வெ.க., துவங்கிய பின், அதில் இணைந்தார்.

பெயர்: கீர்த்தனா

வயது:30

முகவரி: காமராஜர் தெரு, என்.ஜி.ஓ., காலனி, சத்திரரெட்டியபட்டி, விருதுநகர்

தொழில்: தனி நபர் ஆலோசகர்

படிப்பு: எம்.எஸ்.சி., புள்ளியியல்

தொகுதி: சிவகாசி



அரசியல் பின்னணி: பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' நிறுவனத்தில் பணியாற்றி, தி.மு.க.,வுக்காக தேர்தல் பணியாற்றினார். பின், தி.மு.க., தரப்பில் துவங்கிய 'பென்' நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த 2025ல் அங்கிருந்து விலகி, விருதுநகரில் சுயேச்சையாக போட்டியிட களப் பணியாற்றினார். த.வெ.க.,வில் மார்ச் 28ல் இணைந்து, மறுநாளே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us