தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ த.வெ.க., நிகழ்ச்சியில் நடனம்; ஆசிரியை 'சஸ்பெண்ட்'

 த.வெ.க., நிகழ்ச்சியில் நடனம்; ஆசிரியை 'சஸ்பெண்ட்'

 த.வெ.க., நிகழ்ச்சியில் நடனம்; ஆசிரியை 'சஸ்பெண்ட்'


ADDED : மார் 27, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 06:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றினார்.

கடந்த சில நாட்களுக்கு முன், ஒரத்தநாட்டில் த.வெ.க., மகளிர் தின விழாவில் பங்கேற்ற அவர், விஜய் நடித்த திரைப்பட பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நன்னடத்தை விதியை மீறி அரசியல் கட்சி விழாவில் பங்கேற்றதற்காக, அவரை சஸ்பெண்ட் செய்து, பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன், கடந்த 24ம் தேதி உத்தரவிட்டார்.

இது குறித்து தலைமையாசிரியை கூறுகையில், “நான் ஆண்டுதோறும் மகளிர் விழா நடத்துவது வழக்கம். த.வெ.க., நடத்திய தனியார் மண்டபத்தில், அவர்களின் விழா முடிந்த உடன், நான் ஏற்பாடு செய்த விழாவில் தான் ஆடினேன். அப்போது, த.வெ.க., பிளக்ஸ் பேனர் அகற்றப்படவில்லை. இதனால், நான் த.வெ.க., நிகழ்ச்சியில் ஆடியதாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us