தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும்; பிரதமர் மோடி வலியுறுத்தல்

5


ADDED : அக் 08, 2026 01:29 PM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : அக் 08, 2026 01:29 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவில் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது; தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் 10வது மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: டீப் பேக் வீடியோக்களால் பெரும் சவால். டீப்ஃபேக்குகள் ஏற்படுத்தும் சவாலின் தீவிரத்தை நாம் கண்டு வருகிறோம். டீப் பேக்குகளை எதிர்கொள்ள உலகளாவிய கட்டமைப்பு அவசியம். இந்தியாவில் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் விழிப்புணர்வின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் காரணமாகவே, குழந்தைகள் தொடர்ந்து கற்கவும், மக்கள் தொடர்பில் இருக்கவும், தொலைதூரப் பணிகள் சாத்தியமாகவும் முடிந்தது.

பயனர்கள் போலி, மோசடி செய்திகள் மற்றும் பிற இணைய அச்சுறுத்தல்கள் குறித்து அதிக விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். விவசாயிகள் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் நிதியுதவி பெறுகிறார்கள்; பணம் வந்து சேரும்போது அதுபற்றி அவர்களின் கைபேசிகளிலேயே நேரடியாகத் தெரிவிக்கப்படுகிறது. பலருக்கு, இந்தத் தொழில்நுட்ப மாற்றம், முன்பு அவர்களால் அணுக முடியாதிருந்த அரசுத் திட்டங்களுக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் இப்போது அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளைத் தாண்டி பலவற்றைச் செய்கின்றன. அவை காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதால், மக்கள் பல்வேறு விஷயங்களில் வேகமான சேவைகளைப் பெற முடிகிறது. பொதுமக்களுக்கு மொபைல் டேட்டாவை மேலும் சிக்கனமாக்குவதற்காக, தொலைதூரப் பகுதிகளில் அதிக மொபைல் டவர் அமைக்கவும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 10-12 ஆண்டுகளில், தொலைத்தொடர்பு கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us