உள்ளடக்கத்திற்கு செல்ல

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தேஜ கூட்டணி உறுதி: பிரதமர் மோடி திட்டவட்டம்
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் தேஜ கூட்டணி உறுதி: பிரதமர் மோடி திட்டவட்டம்
ADDED : நவ 29, 2026 08:15 PM

அ நிறம் | அளவு
-நமது நிருபர்-
மகளிர் இட ஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா, லோக்சபாவில் நாளை (நவம்பர் 30) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சமூக வலைதளத்தில், பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ செய்தி:
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம், தற்போதைய காலத்தின் தேவை. சிலருக்கு தேச நலனை விட, கட்சி நலனே எல்லாமாக மாறும் போது, அதற்கான விலையை பெண் சக்தியும், தேச நலனுமே கொடுக்க வேண்டியிருக்கிறது.
பெண் சக்திக்கு அதிகாரமளிப்பதில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியின் உறுதிப்பாடு அப்படியே உள்ளது. எங்களுக்கு தேச நலனே முதன்மையானது. இவ்வாறு அவர் கூறினார்.
