தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கோவில் நிலங்கள் மீட்பு: ஹிந்து முன்னணி ஆதரவு

 கோவில் நிலங்கள் மீட்பு: ஹிந்து முன்னணி ஆதரவு

 கோவில் நிலங்கள் மீட்பு: ஹிந்து முன்னணி ஆதரவு

1


ADDED : செப் 21, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 04:01 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: 'கோவில் சொத்துகள் நுாதனமாக கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன; தி.மு.க.வின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

ஸ்ரீரங்கம் கோவில் சொத்தின் மூலப்பத்திரம் காணவில்லை என கூறி, புதுச்சேரியில் அதற்கான சான்று பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் விற்கப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தி.மு.க. அலுவலகம் இருப்பதாகவும், விஞ்ஞான ஊழல் நடந்ததையும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுபோல், தமிழகம் முழுவதும் கோவில் நிலங்களில் தி.மு.க., - தி.க. மற்றும் அக்கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படும் விவரங்களை ஹிந்து முன்னணி திரட்டி வருகிறது. கோவில் சொத்துகளை யார் ஆக்கிரமித்திருந்தாலும், நீதிமன்ற நடவடிக்கை வாயிலாக அவற்றை மீட்க வேண்டும்.கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட முறை கேடுகள், அதிகாரிகளின் துணையின்றி நடக்காது. எனவே, இத்தகைய முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலங்கள் தொடர்பான புகார்களை முழுமையாக விசாரித்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும். அதற்காக, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஹிந்து முன்னணி ஆதரவளிக்கும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us