சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படவிருந்த தாக்குதல் முறியடிப்பு!
சுதந்திர தினத்தையொட்டி நடத்தப்படவிருந்த தாக்குதல் முறியடிப்பு!
ADDED : ஆக 19, 2026 01:04 AM

புதுடில்லி: சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில்: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: 200 பேரை: இதன் மூலம்: பாகிஸ்தானைச் சேர்ந்தவர் பயங்கரவாதி ஷசாத் பாட்டி. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து செயல்படுவதாக கூறப்படும் இவரை, 'பேஸ்புக்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
கண்காணிப்பு
அவர்களில் சிலர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இவர் தன் பதிவுகளுக்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவிக்கும் இந்திய இளைஞர்களை கண்காணித்து, சிலரை தனியாக தொடர்பு கொண்டு நாட்டிற்கு எதிரான நாச வேலைகளுக்கு ஆள் சேர்த்துள்ளார்.
அவர்களில் சிலருக்கு 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கொடுத்து, தன் புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்ட செய்துள்ளார்.
இதற்கு சம்மதித்தவர்களில் சிலருக்கு கையெறி குண்டுகளை வீசுவது, வெடி பொருட்களை வைப்பது, முக்கியமான இடங்களை கண்காணிப்பது போன்ற பணிகளும் வழங்கப்பட்டு உள்ளன.
ரயில் நிலையங்கள், விமானப்படை தளங்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, அதன் காட்சிகளை பாகிஸ்தானில் பெற்றதாக கூறப்படுகிறது. ஐ.இ.டி., எனப்படும், சக்திவாய்ந்த வெடிகுண்டு தயாரிப்பது குறித்தும் ஆன்லைன் மூலம் இளைஞர்களுக்கு ஷசாத் கற்று தந்துள்ளார்.
சோதனை
ஷசாத் தொடர்பான பயங்கரவாத வழக்குகளை என்.ஐ.ஏ., ஏற்கனவே விசாரித்து வந்தது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று அவருடைய ஆட்கள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுதந்திர தினத்துக்கு முன் 12ம் தேதி உத்தர பிரதேசம், ஹரியானா, டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, உத்தரகண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்பினர் ஒருங்கிணைந்து சோதனை நடத்தினர். அப்போது ஷசாத் குழுவுடன் தொடர்புடைய 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடவடிக்கைகளில், ஐ.இ.டி., குண்டுகள், பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையின் அடையாளங்கள் கொண்ட கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள், பெட்ரோல் குண்டுகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சிம் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
80 வழக்குகள்
கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டம், ஆயுத சட்டம், போதைப் பொருள் தடுப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ், 80க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த சதிச்செயல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
கடந்த 2025 மார்ச்சில், பஞ்சாபின் ஜலந்தரில் சமூக வலைதள பிரபலமான ரோஜர் சந்து வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலுக்கு ஷசாத் மூளையாக செயல்பட்டதாக என்.ஐ.ஏ., குற்றஞ்சாட்டிஉள்ளது. இந்த வழக்கில், 2026 ஏப்ரலில் அவர் தலைமறைவான குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மேலும், 2025ல் ஹரியானாவின் சிர்சா மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் அம்பாலா போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த குண்டுவெடிப்புகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ., கூறுகிறது.
