போலி மதச்சார்பின்மையின் சாயம் வெளுத்துப்போனது: ஹிந்து முன்னணி
போலி மதச்சார்பின்மையின் சாயம் வெளுத்துப்போனது: ஹிந்து முன்னணி
ADDED : நவ 29, 2026 10:22 PM

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை:
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டது, நுாறாண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி, மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட்டதன் வாயிலாக, ஹிந்துக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. போலி மதச்சார்பின்மை பேசி அரசியல் செய்து வந்தவர்களின் சாயம் வெளுத்துப்போனது. அவர்களின் கருத்துகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
தீபம் ஏற்றுவதற்காக சட்டப்போராட்டம் நடத்திய அனைவருக்கும், முருக பக்தர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். திருப்பரங்குன்றம் மலை மற்றும் தீபத்துாணை பாதுகாக்க, மத்திய பாதுகாப்பு படையை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
