தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உருவாகிறது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை!

உருவாகிறது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை!

உருவாகிறது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை!


ADDED : மே 11, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கும் அரசாணையில், தமிழகத்தின் புதிய முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வராக விஜய் நேற்று பதவி ஏற்றார்.

அதை தொடர்ந்து, த.வெ.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், மூன்று முக்கிய அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அவற்றின் விபரம்:

* இரண்டு மாதங்களுக்கு, 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

* பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் போதுமான போலீசார் கொண்ட, அதிநவீன வசதிகளுடன் கூடிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, மாநிலம் முழுதும் உருவாக்கப்படும். இதன் வாயிலாக, பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது, விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

* தமிழகத்தில் போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களை தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 போலீஸ் நிலையங்கள், ஒன்பது மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில், தலா ஒன்று வீதம் 28 போலீஸ் நிலையங்கள் என மொத்தம் 65 இடங்களில், போதை பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us