தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை

2


ADDED : அக் 15, 2026 12:12 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : அக் 15, 2026 12:12 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் ஒரிரு தினங்களாக குறைந்தது. அடுத்ததாக, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தற்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இந்த பருவமழை துவங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு சீரான மழைப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரி கடல் பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சர்கள் ஆலோசனை


வடகிழக்கு பருவமழையை ஒட்டி, சென்னையில் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தினர். மழை காலத்தில் சென்னை மற்றும் மழையினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us