தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் சமரசம் செய்த விஷயங்கள் இதுதான்; ராகுலுக்கு பாஜ பதிலடி

காங்கிரஸ் சமரசம் செய்த விஷயங்கள் இதுதான்; ராகுலுக்கு பாஜ பதிலடி

காங்கிரஸ் சமரசம் செய்த விஷயங்கள் இதுதான்; ராகுலுக்கு பாஜ பதிலடி


ADDED : நவ 20, 2026 02:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 02:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோரின் முத்தரப்புப் பேச்சு புகைப்படத்தை காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பகிர்ந்துள்ளார். 'சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமர் ஒருபோதும் இந்த மேசையில் அமர முடியாது' என ராகுல் கடுமையாக சாடி இருந்தார்.

பாஜ செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் சமரசமான நடத்தைக்கு மேலும் சில உதாரணங்கள்;

7 ஆகஸ்ட் 2008, பெய்ஜிங்

காங்கிரஸுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஒரு ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு சீன ஊடுருவல்கள் பன்மடங்கு அதிகரித்தன. சீன ஊடுருவல்களுடன் ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கும் நன்கொடைகள் கிடைத்தன.

2004-14 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விட இவ்வளவு சமரசமான ஒரு அரசை இந்தியா எப்போதாவது கண்டிருக்கிறதா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், மீண்டும் இதுதான் நடந்திருக்கும்.

சிம்லா ஒப்பந்தம்: ஜூலை 2, 1972

பாகிஸ்தான் அதிபர் ஜுல்பிகர் அலி பூட்டோ, பிரதமர் இந்திராவை சந்திப்பதற்காக சிம்லா வந்தடைந்தார். அதன் பிறகு நடந்ததோ அதிர்ச்சியளிக்கும் ஒன்று. இந்திய வீரர்கள் போரில் கைப்பற்றிய 15,010 சதுர கிலோமீட்டர் பாகிஸ்தான் நிலத்தை, இந்திரா மீண்டும் பாகிஸ்தானிடமே ஒப்படைத்தார். அதுமட்டுமின்றி, பிடிபட்ட 93,000 பாகிஸ்தான் வீரர்களையும் அவர் எவ்வித நிபந்தனையுமின்றி திருப்பி அனுப்பினார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us