டில்லி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
டில்லி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
ADDED : நவ 11, 2025 12:22 PM

புதுடில்லி: டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, நிருபர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:
டில்லி சம்பவத்திற்கு காரணமானவர்கள் எந்த சூழ்நிலையிலும் தப்பிக்க விடமாட்டோம். டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாட்டின் முன்னணி விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என்று நான் தேசத்திற்கு உறுதி அளிக்கிறேன். இந்த துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதில் தொடர்புடையவர்களை நாங்கள் தப்பிக்க விடமாட்டோம்.
இந்த சம்பவம் தொடர்பாக உண்மை மக்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நீதி பெற்றுத்தரப்படும்.
குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். விசாரணையின் முடிவுகள் விரைவில் பொதுவெளியில் வெளியிடப்படும். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், ஆறுதலையும் அளிக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

