தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்

மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்

மிரட்டும் எதிரிகள் : பெண் அமைச்சர் ஆவேசம்

35


UPDATED : ஜூன் 22, 2026 08:56 AM

ADDED : ஜூன் 22, 2026 07:57 AM

Follow on GoogleFavourite on Google

35

UPDATED : ஜூன் 22, 2026 08:56 AM ADDED : ஜூன் 22, 2026 07:57 AM


35
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

'எதிரிகள் என்னை மிரட்டுகின்றனர் அதற்கெல்லாம் நான் பயப்படுகிற ஆள் இல்லை' என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.

மிரட்டுவது தனிப்பட்ட நபரா, உட்கட்சியா, எதிர்க்கட்சியா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியதாவது: பெயர் சொல்லாமல் மறைமுகமாக மிரட்டுகிறார்கள்.

அதாவது எந்த நூதன முறையில் மிரட்டுகிறார்கள் என்றால் என் தொகுதியில், இந்த பிரச்னை, என் வார்டில் இந்த பிரச்னை என்று பொய்யான தகவல் சொல்கின்றனர். பொய்யான பெயர் சொல்லி பேசுகின்றனர். விசாரிக்கும் போது அதில் எந்த உண்மை தன்மை எதுமே இல்லை.

10 நிமிடங்களுக்கு ஒரு முறை போன் செய்து எனது பிஏவை மிரட்டுகின்றனர்.நீங்கள் என்ன நாங்கள் வந்து ஒரு தகவல் சொன்னா கேட்கவில்லை என வேண்டும் என்றும் சொல்கின்றனர். இது எதிர்க்கட்சி சூழ்ச்சி தான், வேண்டுமென்று எனது தொகுதியில் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவர் போன் செய்து எங்களுக்கு பைக் வந்து பஞ்சர் ஆகிவிட்டது. பஞ்சர் கடை எங்கே இருக்கு என்று போன் செய்து கேட்டுவிட்டு நக்கலாக சிரிக்கிறாப்ள, இந்த மாதிரி தொந்தரவு செய்யும் வகையில் நிறைய போன் கால் வருகிறது.

மக்களுக்கு சேவை செய்ய விடாமல் தடுத்துகொண்டு வருகின்றனர். என்ன தடுத்தாலும் சோர்ந்து போகமாட்டோம். எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும். எவ்வளவு தொந்தரவு கொடுத்தாலும் நாங்கள் மக்களுக்கு உழைப்பதற்கு எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

என்ன கஷ்டம் வந்தாலும் நான் தாங்கி கொள்வேன்.இது குறித்து நான் எந்த புகார் மனுவும் அளிக்கவில்லை. இது என்னை வளர்த்துவிடுவதற்கு ஒரு வழியாக தான் நினைக்கிறேன். இதை நான் ஒரு குறையாக நினைக்கவில்லை. இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us