அரபிக்கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி : மாயமான 4 பேரை தேடும் பணி தீவிரம்
அரபிக்கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி : மாயமான 4 பேரை தேடும் பணி தீவிரம்
ADDED : அக் 03, 2025 08:12 PM

மும்பை: மஹாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில், சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அரபிக் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மாயமான நான்கு பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மஹாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் சுற்றுலா வந்திருந்த ஒரு குடும்பத்தினர் அரபிக்கடல் கடற்கரைக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேர் தண்ணீரில் மூழ்கினர். மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகின்றன. தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்டு, போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அரபிக் கடல் கடற்கரையில் சுற்றுலா சென்றிருந்தபோது, மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.