தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்

உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்

உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்

1


UPDATED : ஜூன் 21, 2026 10:26 AM

ADDED : ஜூன் 21, 2026 07:19 AM

Follow on GoogleFavourite on Google

1

UPDATED : ஜூன் 21, 2026 10:26 AM ADDED : ஜூன் 21, 2026 07:19 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜெர்மனி அணி 2-1 என, ஐவரி கோஸ்டை வீழ்த்தியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் இ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இன்று கனடாவின் டொரோண்டோவில் நடைபெற்றது. 30வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணி வீரர் பிராங்க் கெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இதனால் ஐவரி கோஸ்ட் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஜெர்மனி சார்பில் மாற்று வீரராக களம் இறக்கப்பட்ட டெனிஸ் உண்டாவ் 60வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து 1-1 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார். பிறகு டெனிஸ் உண்டாவ் மீண்டும் ஒரு கோலை அடித்து ஜெர்மனி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

ஆட்ட நேரமுடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கணக்கில் ஐவரி கோஸ்டை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜெர்மனி அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது. டெனிஸ் உண்டாவ், ஜெர்மனி அணிக்காக 11 சர்வதேசப் போட்டிகளில் ஒன்பது கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து வெற்றி

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்கான 'எப்' பிரிவு லீக் போட்டியில் நேற்றிரவு சுவீடன், நெதர்லாந்து அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணிக்கு பிரையன் பிராப்பி 2 கோல் (5, 17வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடிய நெதர்லாந்து அணிக்கு காக்போ 2 கோல் (47, 54வது நிமிடம்) அடித்தார். தொடர்ந்து போராடிய சுவீடன் அணிக்கு 59வது நிமிடத்தில் எலங்கா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். பின், 89வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்தது. ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜப்பானுக்கு எதிராக 'டிரா' செய்த நெதர்லாந்து, முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டம் டிரா!

மற்றொரு போட்டியில் 'இ' பிரிவில் உள்ள ஈக்வடார், குரோசா அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினார்கள். ஆனால் ஆட்டம் இறுதி நேர முடியும் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் ஈக்வடார், குரோசா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி 0-0 என்ற சமனில் முடிந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us