தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்: முதல்வர் விஜய்
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்: முதல்வர் விஜய்
UPDATED : அக் 04, 2026 05:48 PM
ADDED : அக் 04, 2026 05:35 PM

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பதை நாடு அறியும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான ஓட்டுகளையும் வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெறுவது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
இந்த இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது, செங்கல்பட்டு மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மக்களும் அளித்த வரவேற்பும், அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள். மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகியோருக்கு விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
தமிழக மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்! மீண்டும் நினைவூட்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
சிறப்பு வீடியோ
முதல்வர் விஜய் வெ ளியிட்ட அறிக்கை குறித்த சிறப்பு வீடியோ தினமலர் இணையதளம் மற்றும் யுடியூப் பக்கங்களில் நேரலை செய்யப்பட்டது.
இதனைக் காண:
