ADDED : நவ 10, 2026 06:37 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் பக்ஸா புலிகள் காப்பகத்தில் இருந்து '' ராணி'' என பெயரிடப்பட்ட பெண் புலி , குழி தோண்டி தப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 30ல், பீஹாரின் வால் மீகி புலிகள் காப்பகத்தில் இருந்து மே.வங்கத்தின் அலிபுர்துவார் நகருக்கு விமானம் வாயிலாக இந்த புலி கொண்டு வரப்பட்டது. புலிகளின் எண்ணிக்கையை பெருக்கும் நோக்கில் பக்ஸா புலிகள் காப்பகத்தில் பாதுகாப்புடன் விடப்பட்டது. அக்டோபர் 2ம் தேதி வனப்பகுதியில் விடப்பட்டது.
கடந்த மாதம் பிற்பகுதியில், பாதுகாப்பான பகுதியில் இருந்து இந்த புலி தப்பியது. இது ஆற்றை கடந்து அசாமின் ரைமோனா தேசிய பூங்காவிற்கு சென்றது. கோக்ராஜார் மாவட்டத்தில் வீட்டு விலங்குகளை கொன்றது.
இதனால், மேற்கு வங்கம் மற்றும் அசாாம் வனத்துறையினர் இணைந்து இந்த புலியை மயக்க மருந்து கொடுத்து பக்ஸா காப்பகத்திற்கு கொண்டு வந்தனர்.
காப்பகத்தில் கான்கிரீட் சுவருக்கு மத்தியில் இந்த புலி அடைக்கப்பட்டு இருந்தது. நவம்பர் 8 ல் இந்த புலி சுவற்றுக்கு கீழே சுரங்கம் தோண்டி காட்டுக்குள் தப்பி சென்றது. அந்த புலிக்கு சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அதனை வனத்துறையினர் கண்காணிக்கின்றனர். புலி தற்போது நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கை விடுத்தனர்.
