தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஆப்பிள் நிறுவன சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக்

ஆப்பிள் நிறுவன சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக்

ஆப்பிள் நிறுவன சிஇஓ பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக்


ADDED : ஆக 31, 2026 05:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 05:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ( சிஇஓ) பொறுப்பில் இருந்து டிம் குக் விலகுகிறார்.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஐபோன்களை தயாரிப்பது அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம். கடந்த 2011ம் ஆண்டு, அந்த நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகினார். இதன் பிறகு அந்த பதவியில் டிம் குக் நியமிக்கப்பட்டார்.

15 ஆண்டுகள் டிம் குக், சிஇஓ ஆக இருந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலர் ஆக உயர்ந்தது. பங்கு மதிப்பும், 25 மடங்கு அதிகரித்து உள்ளது.அவர் பதவி ஏற்ற போது ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 13 டாலர் ஆக விற்பனை ஆனது. தற்போது இது 2,359.2 மடங்கு அதிகரித்து 319.70 டாலர் ஆக விற்பனை ஆகி வருகிறது. அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2011 ல் 108 அமெரிக்க டாலர் ஆக இருந்தநிலையில் தற்போது 400 பில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது.

அவரது பதவிக்காலத்தில் உடல்நிலை ,உடற்தகுதி உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் ஆப்பிள் வாட்ச் 2015 ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு ஏர்பாட்கள், விஷன் புரோ உள்ளிட்ட புதிய சாதனங்களையும் ஆப்பிள் மியூசிக், ஐ கிளவுட் உள்ளிட்ட சேவைகளையும் டிம் குக் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில், தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து டிம் குக் விலகி உள்ளார். அவருக்கு பதில் ஜான் டர்னஸ் புதிய சிஇஓ ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us