தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்கள் பறக்க தடை

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்கள் பறக்க தடை

திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு; டிரோன்கள் பறக்க தடை


ADDED : நவ 23, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 06:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நவ.20ம் தேதி இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துளளது.

மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதிகள் அர்விந்த்குமார், விபுல் பஞ்சோலி அமர்வுக்கு இன்று அலுவல் இல்லை என்பதால் மனு விசாரணைக்கு வரவில்லை. நாளை குருநானக் ஜெயந்தி என்பதால் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை. எனவே, தமிழக அரசின் சீராய்வு மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

எனவே, கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், தீபத்தூண் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். மலைப்பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அங்குள்ள நிலைமைகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரும் சூழலில், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி, கிரிவலம் செல்லும் பாதை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us