இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு
இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு
UPDATED : அக் 20, 2025 03:31 PM
ADDED : அக் 20, 2025 02:15 PM

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அரபிக்கடல் - லட்சத்தீவு பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர்,மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் இரு தினங்களுக்கு மிக கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ம் தேதி (நாளை); ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.
22ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்
கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
23ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.