விண்வெளியில் பயணம் செய்வது எளிது: பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து சுபான்ஷூ சுக்லா பளீச்
விண்வெளியில் பயணம் செய்வது எளிது: பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து சுபான்ஷூ சுக்லா பளீச்
ADDED : நவ 21, 2025 10:02 AM

பெங்ளூரு: பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் பயணிப்பதை விட, விண்வெளியில் பயணம் செய்வது எளிது என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா நகைச்சுவையாக பேசினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை சுபான்ஷூ சுக்லா படைத்தார் . விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு, 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவர்தான். பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக, சுபான்ஷூ சுக்லா பங்கேற்றார். இவர் மாநாட்டில் கலந்து கொள்ள, பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிரமம் அடைந்துள்ளார்.
இது குறித்து நகைச்சுவையாக மாநாட்டில், சுபான்ஷூ சுக்லா பேசியதாவது: நான் பெங்களூருவின் மறுபக்கமான மாரத்தஹள்ளியிலிருந்து வருகிறேன். இந்த மாநாட்டில் நான் உங்களுடன் செலவிடப் போகும் நேரத்தை விட மூன்று மடங்கு நேரத்தை நான் செலவிட்டேன். எனவே, எனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நீங்கள் பார்க்க வேண்டும்.
பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் பயணிப்பதை விட, விண்வெளியில் பயணம் செய்வது எளிது.
மராத்தஹள்ளியில் இருந்து பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் உள்ள உச்சிமாநாடு நடைபெறும் இடத்திற்கு தனது பயணம் வழக்கமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எடுக்கும். தற்போது 34 கி.மீ பயணம் தனது திட்டமிடப்பட்ட உரையை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுத்தது. இவ்வாறு சுபான்ஷூ சுக்லா பேசினார். சுபான்ஷூ சுக்லாவின் நகைச்சுவையான கருத்துக்கு கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, ''இதுபோன்ற தாமதங்கள் மீண்டும் நிகழாமல் மாநில அரசு உறுதி செய்யும்'' என்று கூறினார்.

