ADDED : நவ 17, 2026 06:08 PM

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா எழுதிய சுயசரிதை நேற்று டில்லியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ராஜிவ்- சோனியா இடையிலான காதல், அவர்கள் சந்தித்து கொண்டது, தனது குழந்தை பருவம் குறித்து ராகுல் பேசினார்.
'' வீட்டில் குடும்பத்தினர் ஒன்றாக உணவு சாப்பிடும் நேரங்களில், ராஜிவின் மடியில் சோனியா அமர்ந்திருப்பார்,'' என ராகுல் கூறினார்.இதைத்தொடர்ந்து ராகுலை பாஜவினர் விமர்சித்தனர்.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா,'' மன்னிக்கவும் மேடம். உங்களின் வாழ்க்கையில் இவ்வளவு சிறப்பான நாளில் கூட உங்களுக்கு ஏற்படவிருந்த தர்மசங்கடத்தை ராகுலால் தடுக்கமுடியவில்லை. இதை தேசம் எப்போதோ புரிந்து கொண்டது. இனியாவது புரிந்து கொள்வீர்கள்,'' என பதிவிட்டு இருந்தார். வேறு சிலரும் ராகுலை விமர்சித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அன்பை வெளிப்படுத்துவதையும், அனுபவிப்பதையும் பாஜ ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் மனங்களில் உள்ள பயம், கோபம், வெறுப்பு ஆகியன தடுக்கிறது.
உண்மையான ஹிந்து என்ற அடிப்படையில், அந்த வலையில் இருந்து அவர்களை விடுவிப்பது எனது கடமை.
அப்போது தான் அவர்களும் அன்பின் அழகையும், மகிழ்ச்சியையும், ஒருமைப்பாட்டையும் உணரத் துவங்குவார்கள். சத்தியம் சிவம் சுந்தரம்'' எனக்கூறியுள்ளார். அத்துடன் கடவுள் சிவன் மற்றும் பார்வதி புகைப்படத்தையும் ராகுல் பகிர்ந்துள்ளார்.
