ரஷ்யா குறித்த கேள்விக்கு இந்தியா பற்றி பதிலளித்த டிரம்ப்
ரஷ்யா குறித்த கேள்விக்கு இந்தியா பற்றி பதிலளித்த டிரம்ப்
UPDATED : செப் 04, 2025 09:32 PM
ADDED : செப் 04, 2025 09:27 PM

வாஷிங்டன்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவுக்கு விதித்த வரி தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார்.
இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளார். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வாஷிங்டன்னில் போலந்து அதிபர் கரோல் நவ்ரோக்கியை சந்தித்த பிறகு டிரம்ப் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, ரஷ்யா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரம்ப் அளித்த பதிலில் கூறியதாவது: எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? சீனாவுக்கு அடுத்து ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரி விதிக்கப்பட்டதை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறீர்களா?இதனை ஏதும் இல்லை என்கிறீர்களா? இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு டிரம்ப பதில் அளித்தார்.