அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படிக்காமலேயே ஏற்க மறுக்கும் உக்ரைன் அதிபர்; டிரம்ப் விரக்தி
அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படிக்காமலேயே ஏற்க மறுக்கும் உக்ரைன் அதிபர்; டிரம்ப் விரக்தி
ADDED : டிச 08, 2025 07:34 AM

நியூயார்க்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலேயே எதிர்ப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் விரக்தியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:நாங்கள் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொடர்ந்து பேசி வருகிறோம். எனினும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி ஒப்பந்த பரிந்துரைகளை படித்து பார்க்காமலேயே எதிர்ப்பது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
உக்ரைனை காட்டிலும் ரஷ்யா அமைதி ஒப்பந்த பரிந்துரைகளுக்கு நல்ல வரவேற்பு அளிப்பது தெரிகிறது. உக்ரைன் மக்களும் எங்களது முயற்சிக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

