கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு; அக்.13ல் தீர்ப்பளிக்கிறது சுப்ரீம்கோர்ட்
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு; அக்.13ல் தீர்ப்பளிக்கிறது சுப்ரீம்கோர்ட்
ADDED : அக் 11, 2025 06:32 PM

டில்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக தொடர்ந்த வழக்கில் அக்.13ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.
தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிபிஐ விசாரணை கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தவெக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கரூர் சம்பவத்தை முன்வைத்து தவெக மட்டுமல்லாது மேலும் 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம்கோர்ட் கடுமையான கருத்துகளை முன் வைத்தது. இரு தரப்பிலும் வாத, பிரதிவாதங்கள் நீண்ட நேரம் நடைபெற்றது.
இந் நிலையில், இன்று மீண்டும் சுப்ரீம்கோர்ட் விசாரணை நடத்தியது. அதில் தவெக தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பு (அக்.13) திங்கட்கிழமை வெளியாகிறது.