சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம்; விஜய் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும்?
சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம்; விஜய் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும்?
ADDED : செப் 09, 2025 02:03 PM

சென்னை: செப்.13 முதல் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தவெக தலைவர் நடிகர் விஜய் தொடங்குகிறார். மொத்தம் 14 சனிக்கிழமைகள், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவர் பிரசாரம் செய்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் அவரது பயணத்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
செப்.13ம் தேதி தமது பிரசாரத்தை அவர் தொடங்கி டிச.20ல் முடிக்கிறார். இந்த 4 மாதங்களில் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே பிரசாரம் செய்கிறார். அக்டோபர் 5ம் தேதி ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
பயணத் திட்டம் விவரம் வருமாறு;
சனிக்கிழமை பிரசாரம்;
செப்டம்பர் - 13, 20, 27 - திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர், வடசென்னை
அக்டோபர்- 4,11, 18, 25 - கோவை, நீலகிரி, திருப்பூர்,ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தென்சென்னை, செங்கல்பட்டு
நவம்பர்- 1, 8, 15,22, 29 - கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, விருதுநகர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம்
டிசம்பர் - 6,13,20 - திண்டுக்கல், தேனி,மதுரை
அக்டோபர் - 5 - ஞாயிற்றுக்கிழமை - கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோடு
மொத்தம் 14 ஊர்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார பட்டியலில் ஒரே ஒரு ஊரில் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை கமென்ட் செய்து சொல்லுங்க, வாசகர்களே!