உள்ளடக்கத்திற்கு செல்ல

ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சி; 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது
ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சி; 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது
ADDED : ஜூலை 06, 2026 05:18 PM

அ நிறம் | அளவு
நமது நிருபர்
உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜரவுடா கிராமத்தில் சிலர், ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுவதாக, ஹிந்து அமைப்புகள் புகார் செய்தன. ஜரவுடாவில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
ஐந்து பெண்கள் உட்பட 12 பேரை மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று டைரிகள், மத நூல்கள், ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், மதமாற்ற பிரசார கூட்டத்துக்கு இடம் வழங்கிய ரஷீத் மற்றும் மோனிஸ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
