காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்
UPDATED : செப் 08, 2025 09:13 PM
ADDED : செப் 08, 2025 04:47 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குல்காமின் குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப்பகுதிக்கு விரைந்த காஷ்மீர் போலீஸ், சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில், ஒருவன் உள்ளூரைச் சேர்ந்தவன் என்றும், மற்றொருவன் பாகிஸ்தானைச் சேர்ந்த ரஹ்மான் பாய் எனவும் தெரியவந்துள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தனர்.