இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
ADDED : டிச 17, 2025 07:52 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினார்.
இஸ்ரேலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து ஜெய்சங்கர் பேசினார். இந்த சந்திப்பு குறித்து , சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெருசலேமில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தேன். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரதமர் மோடியின் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
தொழில்நுட்பம், பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். நமது நல்லுறவு இன்னும் பலப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

