யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு புதுக்கட்டணம்: சாமானியர்களுக்கு பாதிப்பு வருமா?
யுபிஐ பணப்பரிமாற்றங்களுக்கு புதுக்கட்டணம்: சாமானியர்களுக்கு பாதிப்பு வருமா?
ADDED : செப் 16, 2026 06:42 AM

கேள்வி: 'மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்' என்றால் என்ன?
பதில்: எம்.டி.ஆர்., எனப்படும், 'மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்' என்ற பெயர், 'கிரெடிட் கார்டு பேமென்ட்' முறையிலிருந்து வந்தது. இது நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம். வாடிக்கையாளர் கடையில் 10,000 ரூபாய் செலுத்தினால், கடைக்காரருக்கு முழு 10,000 ரூபாயும் செல்லாது. பேமென்ட் சேவை வழங்குநர் அல்லது வங்கி அந்த தொகையிலிருந்து மிகச்சிறிய கட்டணத்தை கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை கடையின் வங்கி கணக்கிற்கு அனுப்பும். இதே போன்ற கட்டண முறை யு.பி.ஐ., வாயிலாக வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெறும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட உள்ளது.
கேள்வி: எம்.டி.ஆர்., கட்டணம் அமலானதும் வாடிக்கையாளர்களிடம் அதை வணிகர்கள் வசூலிப்பார்களா?
பதில்: இல்லை. இந்த கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டால், அது வணிகர்களுக்கான கட்டணமாக இருக்கும். வாடிக்கையாளர் கணக்கிலிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படாது.
கேள்வி: யு.பி.ஐ., வசதிக்கு வருவாய் ஏன் தேவைப்படுகிறது?
பதில்: யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு நிலையான வருவாய் தேவை.
