அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலி; பங்குச்சந்தை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம்
அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலி; பங்குச்சந்தை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி லாபம்
UPDATED : நவ 05, 2026 05:04 PM
ADDED : நவ 05, 2026 10:30 AM

நமது நிருபர்
அமெரிக்காவில் நடந்த இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று, பார்லிமென்டின் இரு சபைகளையும் கைப்பற்றியது. அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையில் எதிரொலித்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் அதிரடியாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் உயர்ந்தது.
நிப்டி 435 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 24,396 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியப் பங்குகளில் பெரிய அளவில் முதலீடு செய்யத் துவங்கி உள்ளனர் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்வால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளது.
