தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து!

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து!

அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து!

5


ADDED : ஜூன் 19, 2026 05:15 PM

Follow on GoogleFavourite on Google

5

ADDED : ஜூன் 19, 2026 05:15 PM


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் தமது சுவிட்சர்லாந்து பயணத்தை ஒத்தி வைத்துள்ளதால் அமெரிக்கா - ஈரான் பேச்சு வார்த்தை திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அமெரிககா, ஈரான் இடையே 14 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தானது. அதிபர்கள் டிரம்ப் மற்றும் மசூத் பெசேஷ்கியா இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதையடுத்து ஜூன் 19ம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல ரிசார்ட் ஒன்றில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந் நிலையில், இந்த முக்கியமான பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. பேச்சு வார்த்தைக்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து செல்லாததே இதற்கு காரணமாகும். வான்ஸ் பேச்சுவார்த்தைக்காக சுவிட்சர்லாந்து பயணிக்க மாட்டார், அதற்கான பேச்சுவார்த்தை கணிக்கக்கூடியதாக இல்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது.

வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்கு சிலமணி நேரங்கள் முன்னதாக, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய லெபனான் ஊடகங்கள் கூறி இருந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us