தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சில் முட்டுக்கட்டை

 அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சில் முட்டுக்கட்டை

 அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சில் முட்டுக்கட்டை


ADDED : ஏப் 26, 2026 09:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 09:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நீண்ட கால பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைதி பேச்சு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சு நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல வேண்டாம் என அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதால், அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டாம் கட்ட பேச்சுக்கான கூட்டம், நம் அண்டை நாடான பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரகசியமாக திட்டமிட்ட இந்த பேச்சில், அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்தப் பேச்சுக்காக பாகிஸ்தான் செல்லவிருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் இந்தப் பயணத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். இதற்கான காரணங்களை சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், 'ஈரான் நாட்டின் தலைவர்களிடையே மிகப்பெரிய அதிகாரப் போட்டியும், குழப்பமும் நிலவுகிறது. யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த போரில் அமெரிக்காவின் கையே ஓங்கியுள்ளது. பேச்சு நடத்த விரும்பினால் ஈரான் எங்களை அழைக்கட்டும்' என கூறியுள்ளார்.

ஆனால் ஈரான் அரசோ, அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் முதலில் இறங்கி வரவேண்டும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. இதனால், அமெரிக்காவுடனான அந்நாட்டின் பகை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கும் என்ற சூழலும் நிலவுகிறது.

இதற்கிடையே, கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த 'ஹார்முஸ் ஜலசந்தி' பகுதி தற்போது, அமெரிக்கா மற்றும் ஈரான் என இருமுனை முற்றுகையில் உள்ளது. இதன் விளைவாக, அந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து 97 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. போரில் இருந்து ஈரான் பின்வாங்க மறுப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகின்றன. ஒன்று, அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதில், பெட்ரோல் விலை உயர்வு டிரம்பிற்கு அரசியல் நெருக்கடியைத் தரும்; எனவே அவர் இறங்கி வருவார் என ஈரான் நம்புகிறது.

இரண்டாவது, போரினால் ஏற்படும் பொருளாதாரச் சேதத்தால், 'நேட்டோ' எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் உள்ள பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள், அதிபர் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளதாக ஈரான் கருதுகிறது. மூன்றாவதாக, அமெரிக்க நிர்வாகத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் கடற்படைச் செயலாளர் ஜான் பெலன் போன்ற உயர்மட்ட அதிகாரிகளின் ராஜினாமா, அமெரிக்காவின் பலவீனத்தைக் காட்டுவதாகவும் ஈரான் கணிக்கிறது.

எனவே, உலக எரிசக்தி நெருக்கடி மூலம் அமெரிக்காவை அடி பணிய வைக்க ஈரான் துடிப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us