அமெரிக்கா விசா விதி மாற்றங்கள்: செப்.,15க்குள் திரும்ப வெளிநாட்டு மாணவர்களுக்கு ஹார்வர்டு பல்கலை அறிவுரை
அமெரிக்கா விசா விதி மாற்றங்கள்: செப்.,15க்குள் திரும்ப வெளிநாட்டு மாணவர்களுக்கு ஹார்வர்டு பல்கலை அறிவுரை
ADDED : ஆக 24, 2026 05:16 PM

வாஷிங்டன்: அமெரிக்கா கொண்டு வந்துள்ள விசா விதிமுறை மாற்றங்கள் செ ப்.,15 ம்தேதி அமலுக்கு வருவதால், அதற்கு முன்னர் வெளிநாட்டு மாணவர்கள் திரும்ப வேண்டும் என ஹார்வர்டு பல்கலை அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் விசா விதிகளில் மிக முக்கிய மாற்றங்களை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது அமலில் உள்ள நடைமுறையின்படி, எப் - 1 விசா வைத்திருக்கும் மாணவர்கள், 'டியூரேஷன் ஆப் ஸ்டேட்டஸ்' என்ற சலுகையின் கீழ் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதாவது, அவர்களின் படிப்பு முடியும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். வரும், செப்.,15க்கு பின் அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை மட்டுமே எப் - 1 விசா அனுமதி வழங்கப்படும்.மேலும், படிப்பு முடிந்த பின் தாய்நாடு திரும்புவதற்காக வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் கால அவகாசம், 30 நாட்களாக குறைக்கப்படுகிறது. அதற்கு மேல் தங்க வேண்டியிருந்தால், தனியாக அனுமதி நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் செப்.,15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதனையடுத்து வெளிநாட்டு மாணவர்கள் அதற்கு முன்னர் பல்கலைகழகத்திற்கு திரும்ப வே ண்டும் என ஹார்வர்டு பல்கலை அறிவுறுத்தி உள்ளது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும்போது ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் மாணவர்கள் இடைக்கால ஏற்பாடுகளில் கீழ் சேர்க்கப்படலாம். அதே நே ரத்தில், குறிப்பிட்ட தே திக்கு பிறகு வெ ளிநாடு செ ன்று திரும்புபவர்கள் வேறுபட்ட சே ர்க்கை நடைமுறையை பின்பற்ற நேரிடும்.
