தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வந்தாச்சு திரிஷா பேரவை; வலைதளங்களில் அமர்க்களம்

வந்தாச்சு திரிஷா பேரவை; வலைதளங்களில் அமர்க்களம்

வந்தாச்சு திரிஷா பேரவை; வலைதளங்களில் அமர்க்களம்


ADDED : நவ 23, 2026 01:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 01:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: கடந்த சில தினங்களாகவே நடிகை திரிஷாவை, அரசியலில் தொடர்புபடுத்தி பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷாவும் கலந்து கொண்டார். அது முதல் அதிமுக, திமுக நிர்வாகிகள் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது, நடிகை திரிஷா பெயரில் திருநெல்வேலியில் 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை துவங்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கட்சிகளில் இருந்த ராஜகோபால் என்பவர் தொடங்கியதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். திரிஷா வணக்கம் சொல்வது போன்ற புகைப்படத்துடன், 'பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக' என்ற வாசகத்துடன் லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த லோகோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள், கேலி, கிண்டல் மீம்ஸ்களை வெளியிட்டு அமர்க்களம் செய்து வருகின்றனர். திரிஷாவின் ஒப்புதலோடு தான் இந்த அமைப்பு துவங்கப்பட்டதா? எனத் தெரியவில்லை. அவரே விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us