உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஆக 05, 2026 08:10 PM
ADDED : ஆக 05, 2026 07:35 PM

அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி: வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு, வாவிகினத்தை சேர்ந்தவர் அன்புராஜ், 36. ராஜபுரம் விஏஓவாக உள்ளார்.
அவரிடம், ராஜபுரம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த கோபால் மகன் விபிலன், 28, வாரிசு சான்றிதழ் கோரினார். அவர், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதனால் விபிலன், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய, 1,000 ரூபாயை, விஏஓ அன்புராஜிடம், அவரது அலுவலகத்தில் வைத்து, விபிலன் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் போலீசார், விஏஓவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
